திமுகதான் வெற்றி பெறும் என நகர்ப்புற உள்ளாச்சி தேர்தலில் வாக்களித்தப்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்காக மாநிலம் முழுவதும் 31 ஆயிரத்து 29 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வக்குப்பதிவு தொடங்கியது முதலே பிரபலங்கள் அனைவரும் தங்களுக்கு உரிய வாக்குசாவடிகலில் வாக்களித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், அமைச்சர்கள், முன்னாள் அமச்சர்கள், நடிகர்கள் என பலரும் தனது வாக்கினை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களிக்க வருகைத் தந்திருந்தார். அப்போது அவர் பொதுமக்களோடு வரிசையில் நின்று வாக்களித்தார். உடன் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலினும் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனநாயக கடமைப்படி எனது வாக்கை செலுத்தியிருக்கிறேன் என்று தெரிவித்தார். அரசின் திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகளின் மூலம்தான் செயல்படுத்த முடியும் என்று குறிப்பிட்ட அவர், உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் கூறினார்.
கோவையில் துணை ராணுவத்தை வரவழைக்கக்கூடிய வகையில் எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்று தெரிவித்த முதலமைச்சர், தோல்வியை மறைக்கவே, கோவையில் அதிமுகவினர் போராட்டம் என்ற நாடகத்தை நடத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும், 21 மாநகராட்சிகளிலும் திமுக அணிதான் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.