Skip to content
June 13, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
sortd
Home » important news » dmk the dmk coral festival started with a bang
முக்கியச் செய்திகள் தமிழகம்

#DMK | சென்னையில் கோலாகலமாக தொடங்கியது திமுக பவள விழா!

திமுகவின் பவள விழா கோலாகலமாக தொடங்கியது. ‘பேரறிஞர்’ அண்ணா பிறந்த விழா, திமுகவின் 75-வது ஆண்டு பவள விழா, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என திமுகவின் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில்…

Author Avatar

Web Editor

September 17, 20245:04 pm arivalayamCMO TamilNaduDMKflaglogoMK StalinMupperum VizhaNews7TamilTN Govt
#DMK | The DMK coral festival started with a bang!

திமுகவின் பவள விழா கோலாகலமாக தொடங்கியது.

‘பேரறிஞர்’ அண்ணா பிறந்த விழா, திமுகவின் 75-வது ஆண்டு பவள விழா, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என திமுகவின் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எ.சி.ஏ மைதானத்தில் தொடங்கியது. இவ்விழாவில் திமுகவின் முப்பெரும் விழா விருதுகள், மூத்த தொண்டர்களுக்கான பணி முடிப்பு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார். இந்த முப்பெரும் விழா திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் 80,000 தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்கள் அனைத்து இடத்திலும் இருந்து நிகழ்ச்சி மேடையை காண 18 இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விழாவில், AI தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வாழ்த்தும் வீடியோ இடம்பெற உள்ளது. இதனை 18 இடங்களில் உள்ள எல்இடி திரைகளில் திரையிடப்படவுள்ளது. மொத்தமாக 10,000 சதுர அடியில் எல்இடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

170 அடி நீளத்திற்கு கோட்டை வடிவிலான முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. மைதானம் முழுவதும் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள், திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் குறித்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 50 அடியில் திமுக கொடி பறக்க விடப்பட்டுள்ளது பசுமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 5,000 வாழை மரங்கள் தோரணங்களாக வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 11 இடங்களில் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 15 ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிவறைகள், ஓய்வறைகள் என பல்வேறு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

By Web Editor June 12, 2026

“தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” – டிடிவி தினகரன்!

By Web Editor June 12, 2026

“டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்” – அன்புமணி!

By Web Editor June 12, 2026

மாலை 5 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

By Web Editor June 12, 2026
#ट्रेंडिंग हैशटैग:arivalayamCMO TamilNaduDMKflaglogoMK StalinMupperum VizhaNews7TamilTN Govt

Post navigation

Previous Previous post: Eee Sala Cup Namde.. – பேப்பரில் எழுதி விநாயகர் சிலையின் முன் வைத்து வழிபட்ட முரட்டு #RCB ரசிகர்!
Next Next post: முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த #ArvindKejriwal… ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிஷி! 
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By
News7 Tamil

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading