திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேசிய தலைவர்கள் வாழ்த்து!

10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் மு.க ஸ்டாலினுக்கு பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், எம்பி சரத் யாதவ், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக…

10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் மு.க ஸ்டாலினுக்கு பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், எம்பி சரத் யாதவ், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதியில் வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சியமைக்க உள்ள மு.க ஸ்டாலினுக்கு பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் ஆதவ் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ’ கருணாநிதி பாதுகாத்த சமூகநீதியை மு.க ஸ்டாலின் தொடர்ந்து முன்னெடுத்து செல்வார். மு.க ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் எம்பி சரத் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பெரும்பான்மையை உங்கள் வசமாக்கிய மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று அவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில்’தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள். மக்களுக்கு உதவும் இடமாக அறிவாலயம் அமையட்டும்’என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மு.க ஸ்டாலினுக்கு காங்கிஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.’ தமிழக மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர்.நாங்கள் உங்கள் தலைமையில் செயல்பட உள்ளோம்’ என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.