திமுக ஆட்சிகால துன்பம், அதிமுக வாக்காக மாறும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

திமுக ஆட்சிக்கு வந்த 8 மாத துன்பங்கள் அதிமுகவுக்கு வாக்காக மாறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று…

திமுக ஆட்சிக்கு வந்த 8 மாத துன்பங்கள் அதிமுகவுக்கு வாக்காக மாறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்காக மாநிலம் முழுவதும் 31 ஆயிரத்து 29 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர்.

சென்னை மந்தவெளி 126 வது வார்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது வாக்கினை பதிவு செய்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

.கொளத்தூரில் திமுகவினர் வாக்குச்சாவடியில் அத்துமீறி நுழைந்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதோடு, வாக்குச்சாவடிக்குள் திமுகவினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர் என்றார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக பணத்தை நம்புவது இல்லை. திமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

பூத் சிலிப்பை அரசு அலுவலர்கள் தான் வழங்க வேண்டும். ஆனால் திமுகவினர் விநியோகம் செய்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த 8 மாத துன்பங்கள் அதிமுகவுக்கு வாக்காக மாறும்.

திருவான்மியூரில் பணப்பட்டுவாடாவில் பிடிபட்டவர்கள் அதிமுகவினர் கிடையாது. இது திமுகவின் திட்டம்.மேலும், கோவையில் குண்டர்கள் குவிக்கப்பட்டதை கண்டித்து எஸ்.பி., வேலுமணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். ஆனால், இதுவரை, குண்டர்கள் வெளியேற்றப்படவில்லை. தற்போதய நிலவரப்படி தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகிறது. இதே நிலை மாலை வரை நீடிக்க வேண்டும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.