ஜூலை 14ஆம் தேதி திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு

முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஜூலை 14 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளதாகக் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி…

முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஜூலை 14 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளதாகக் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்க்கு முன்பாக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் ஜூலை 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில், இக்கூட்டத்தொடரில் பங்கேற்று விவாதிப்பது தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 14-ந்தேதி நடைபெற உள்ளதாக திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாயலத்தில் வருகிற 14-ந்தேதி காலை 10.30 மணிக்கு எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜூலை 14-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு | DMK | Latest News Updates - YouTube

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில், ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை செய்ப்பட உள்ளதாகவும், டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் எதிர்ப்பு, மணிப்பூர், பொது சிவில் சட்ட விவகாரங்களை சக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து எழுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஆளுநர் ஆர் என் ரவியை திரும்பப் பெற வலியுறுத்துதல், அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு, நீட் தேர்வு ரத்து உள்ளிட்டவற்றை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற தொகுதிகளில் மக்கள் பணி, கருணாநிதி நூற்றாண்டு விழா, தேர்தல் முன் தயாரிப்புகள் உள்ளிட்டவை குறித்தும் அறிவுறுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.