’திமுகவினர் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்’ – வி.கே. சசிகலா

மறைமுக தேர்தலில் திமுகவினர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் வெள்ளளூர் பேரூராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக உள்ள நிலையில், திமுகவினர் முறைகேட்டில் ஈடுபட்டு பேரூராட்சியை…

மறைமுக தேர்தலில் திமுகவினர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் வெள்ளளூர் பேரூராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக உள்ள நிலையில், திமுகவினர் முறைகேட்டில் ஈடுபட்டு பேரூராட்சியை கைப்பற்ற முயல்வதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுகவினரை அச்சுறுத்தி மறைமுக தேர்தலை சீர்குலைக்கும் வகையில் திமுக செயல்படுவது கண்டனத்திற்குரியது எனக் கூறியுள்ளார். இதேபோன்று மதுரை, கரூர், தென்காசி உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் மறைமுக தேர்தலை சீர்குலைக்க திமுகவினர் முயற்சி செய்வதாகக் கூறியுள்ள சசிகலா,

காவல்துறையினர் பாரபட்சம் பார்க்காமல் செயல்பட்டு மறைமுக தேர்தலை நடத்த வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வேலியே பயிரை மேயும் கதையாக திமுக அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது எனவும் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.