ஆண்களுக்கு இலவச பேருந்து சேவை? – அமைச்சர் பதில்

நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் கொடுத்தது போல ஆண்களுக்கும் கொடுக்க முடியாது என போக்குவரத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம்…

நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் கொடுத்தது போல ஆண்களுக்கும் கொடுக்க முடியாது என போக்குவரத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் 75வது சுதந்திர திரு நாளை முன்னிட்டு தியாகிகள் புகைப்பட கண்காட்சியை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்து தியாகிகளின் புகைப்படங்களை பார்வையிட்டார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களையும் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் கொடுப்பது போல் ஆண்களுக்கு கொடுக்க முடியாது என்றும் ஏற்கனவே போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு திரும்பியதும் அதிகமான தொழில்கள் துவங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். பொதுமக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் திமுக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.