பிரதமர் மோடி ஆட்சியில் சொந்த நாட்டு மக்கள் மீதே பொருளாதார தாக்குதல் நடைபெறுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சோவியத் ஸ்டாலின் இல்லாமல் கம்யூனிச தத்துவம் எப்படி இருக்க முடியாதோ அதேபோலதான், இந்த ஸ்டாலின் இல்லாமல் கம்யூனிஸ்ட் மாநாடு நடத்த முடியாது என்கிற உணர்வோடு என்னை நீங்கள் அழைத்துள்ளீர்கள் அதற்கு நன்றி.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டணி கட்சிகளின் எண்ணங்களுக்கும் மதிப்பளிப்போம் என்று கூறினார். வரும் தேர்தல் லட்சியத்திற்கான, ஆட்சிமாற்றத்திற்கான தேர்தல் என்று குறிப்பிட்ட அவர், தனது ஊழலை மறைக்க அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக விமர்சனம் செய்தார். தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி ஆட்சியில் சொந்த நாட்டு மக்கள் மீதே பொருளாதார தாக்குதல் நடைபெறுவதாக சாடினார். மேலும், அதிமுகவை அச்சுறுத்தி பாஜக தன்னை தமிழகத்தில் பலப்படுத்தி கொள்ள முயல்வதாகவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.