முக்கியச் செய்திகள் தமிழகம்

பெங்களூருவில் இருந்து ஒருவர் கொடியோடு புறப்பட்டுவிட்டார்: மு.க.ஸ்டாலின்

பெங்களூருவில் இருந்து ஒருவர் கொடியோடு புறப்பட்டு விட்டார், இனி என்ன நடக்கப்போகிறதோ என தெரியவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


பெங்களூரு தேவனஹள்ளியில் இருந்து அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா இன்று காலை புறப்பட்டார். அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனுக்கு கிருஷ்ணகிரி போலீஸார் நோட்டீஸ் அளித்தனர். எனினும், தமிழக எல்லையில் இருந்து அதிமுக உறுப்பினர் அட்டை வைத்துள்ள ஒன்றியச் செயலாளர் ஒருவரின் காரில் மாறி, அதிமுக கொடியுடனே பயணத்தைத் தொடர்கிறார் சசிகலா.

இந்த நிலையில் புதுக்கோட்டையில் திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், 3 மாதங்களில் திமுக தான் தமிழகத்தை ஆளப்போகிறது என்றார். மேலும், தற்போது நிலவும் அரசியல் சூழலில் 200 தொகுதிகள் அல்ல, 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என ஸ்டாலின் தெரிவித்தார்

மேலும், தவழ்ந்து சென்று முதல்வர் ஆனாரா இல்லையா பழனிச்சாமி எனக் கேள்வி எழுப்பிய ஸ்டாலின், “இப்போது பெங்களூரில் இருந்து கொடியோடு ஒருவர் புறப்பட்டு விட்டார். என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை. நடக்க வேண்டியது நடக்கும்” என்று பேசினார்.

Advertisement:
SHARE

Related posts

ராகுல்காந்தியின் வருகை காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் புத்துணர்ச்சியை எற்படுத்தியுள்ளது; எம்.எல்.ஏ விஜயதரணி கருத்து!

Saravana

திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு தர வேண்டும்! – காங். மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி

Saravana

நீட் தேர்விலிருந்து முதலமைச்சர் நிச்சயம் விலக்கு பெற்றுத்தருவார்: மா.சுப்பிரமணியன்

Vandhana

Leave a Reply