முக்கியச் செய்திகள் விளையாட்டு

முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்சில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 578 ரன்கள் குவித்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியில் ரிஷப் பண்ட் 91 ரன்களும், புஜாரா 73 ரன்களும் எடுத்தனர். வெளிநாட்டில் அறிமுகமான போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்த நிலையில், இந்திய மண்ணில் அறிமுக போட்டியிலும் அரைசதம் கடந்து அசத்தினார்.

வாஷிங்டன் சுந்தர் ஒரு புறம் நங்கூரமாக நின்று அணியை மீட்க போராடிய போதும், மறுபுறம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்ததால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வாஷிங்டன் சுந்தர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி சார்பில் டாம் பெஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இங்கிலாந்தை விட 241 ரன்கள் பின்தங்கி இருந்த போதும், இந்தியாவுக்கு பாலோ-ஆன் வழங்காமல், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது. 13.2 ஓவர் முடிவில்  2  விக்கெட்டுகளை இழந்து 44 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து அணி. ஜோ ரூட் 10, லாரன்ஸ் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

Advertisement:
SHARE

Related posts

தபால் வாக்குகளில் திமுக முன்னிலை

Halley karthi

மளிகை கடைகளில் குவிந்த மக்கள்!

ஏடிஎம் கொள்ளையனுக்கு 7 நாள் போலீஸ் காவல்

Saravana Kumar

Leave a Reply