உத்தரகாண்டில் பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 170 நபர்கள் காணாமல் போயுள்ளனர். விபத்தில் இதுவரை 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நந்தா தேவி மலைப் பகுதியில் ஏற்பட்ட கடும் பனிப்பாறைகள் சரிவு காரணமாக தவுளிகங்கா, அலக்ந்தா ஆகிய ஆறுகளின் துணை ஆறான ரிஷிகங்காவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ரிஷிகங்கா நீர்மின் நிலையத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் காவலர்கள் உள்பட சுமார் 170 நபர்கள் காணாமல் போயியுள்ளனர். இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் வழங்குவதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் அறிவித்துள்ளார். விபத்தில் நடைபெற்று வந்த இரண்டு நீர் மின் திட்டப் பணிகள் மற்றும் முக்கிய பாலம் ஒன்றும் கடும் சேதம் அடைந்தது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ரிஷிகங்கா ஆற்றின் ஐந்து கி.லோ மிட்டர் தூரத்தில் உள்ள தபோவன் பகுதியில், தேசிய அனல் மின் திட்டப் பணிக்காக கட்டப்பட்ட சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட இரண்டு பேரை இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை மீட்டது. மேலும் 35 பேர் சிக்கிக் கொண்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆகியோர் மீட்புப் பணி குறித்த கள நிலவரத்தைக் தன்னிடம் கேட்டறிந்ததாக முதலமைச்சர் திரிவேந்திர சிங் கூறியுள்ளார்.
மேலும் உத்தரப் பிரதேசம், குஜராத், பிகார் உள்ளிட்ட மாநில அரசுகள் தாமாக முன் வந்து உதவுவதாக தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்குவதாக நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார்.
மாநில பேரிடர் மீட்புக் குழு, தேசிய பேரிடர் மீட்பு படை, இந்தோ- திபெத்திய எல்லைக் காவல் படை ஆகியோர் காணாமல் போன பலரை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஜநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.








