அதிமுகவை எதிர்க்க திமுகவிடம் சக்தி கிடையாது – எடப்பாடி பழனிசாமி

ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ஈரோட்டிலிருந்து பெருந்துறை செல்வதற்கு நான்கு வழிச்சாலை…

ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று பரப்புரை மேற்கொண்டார்.

பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ஈரோட்டிலிருந்து பெருந்துறை செல்வதற்கு நான்கு வழிச்சாலை எங்கள் ஆட்சியில் அமைத்து கொடுக்கப்பட்டது. பள்ளிப்பாளையம்  – ஈரோடு இணைக்க பாலம் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. ஆனால்,  திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆன நிலையில் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.

இன்றைக்கு வீதி வீதியாக அமைச்சர்கள் அலைகிறார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பு ஒரு அமைச்சராவது உங்களை வந்து பார்த்தார்களா?, குறைகளை கேட்டார்களா?. இப்போது தேர்தல் வந்துவிட்டதால் வீதி வீதியாக வந்து தோசை சுடுகிறார்கள், புரோட்டா போடுகிறார்கள். இன்றைக்கு திமுக ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற நிலைமை வந்துவிட்டது. அதனால்தான் சென்னையில் இருந்து அனைத்து அமைச்சர்களும் ஈரோட்டில் வீதி வீதியாக செல்கிறார்கள். ஒவ்வொரு அமைச்சரும் ஒரு திட்டத்தை கொண்டு வந்திருந்தால் கூட ஈரோடு மக்களுக்கு நன்மை கிடைத்திருக்கும்.

அண்மைச் செய்தி:  ஸ்வீட் கார்ன் விற்பனையாளரின் இசை திறமையை புகழ்ந்த ஆனந்த் மஹிந்திரா

அதிமுகவை எதிர்க்க திமுகவிடம் சக்தி கிடையாது. கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்கு கொட்டகை அமைத்து திமுகவினர் மக்களை அடைத்து  வைத்துள்ளார்கள். எட்டிய தூரம் வரை அதிமுக தெரியவில்லை என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். பிறகு ஏன் மக்களை அடைத்து வைக்கிறார்கள்.

ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த 21 மாதங்களில் மக்கள் பணத்தில் அவர் அப்பாவுக்கு நினைவு மண்டபம் கட்டினார். ஆனால், திமுக அரசு 7.5 லட்சம் முதியோர்களுக்கு உதவித் தொகையை நிறுத்தியது. பேனா சிலை வைப்பதற்கு பதிலாக முதியோருக்கு உதவி தொகையை கொடுக்கலாம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி  பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.