கிரிக்கெட்டில் அசத்திய சிறுமி – சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

கிரிக்கெட்டில் அசத்தும் சிறுமி ஒருவரை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இந்தியாவையும், கிரிக்கெட்டையும் பிரிக்கவே முடியாது. கிரிக்கெட் என்று எடுத்துக் கொண்டால் தவிர்க்கவே முடியாத பெயர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், சமூகவலைதளங்கள்…

கிரிக்கெட்டில் அசத்தும் சிறுமி ஒருவரை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

இந்தியாவையும், கிரிக்கெட்டையும் பிரிக்கவே முடியாது. கிரிக்கெட் என்று எடுத்துக் கொண்டால் தவிர்க்கவே முடியாத பெயர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், சமூகவலைதளங்கள் மூலம் சச்சின் கிரிக்கெட் தொடர்பான பதிவுகளை பகிர்ந்து வருகிறார். ஆடவருக்கான ஐபிஎல் ஹிட் அடித்த நிலையில், மகளிருக்கும் ஐபிஎல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. இதற்கான ஏலம் சமீபத்தில் மும்பையில் நடந்தது.

இந்நிலையில் சிறுமி ஒருவர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் சிறுவர்களுடன் இணைந்து ஒரு சிறுமி கிரிக்கெட் விளையாடுகிறார். தன்னை நோக்கி வந்த அனைத்து பந்துகளையும் அவர் சிக்ஸருக்கு பறக்கவிடுகிறார். இந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சச்சின், ‘நேற்று தான் மகளிர் ஐபிஎல் ஏலம் நடந்தது. இன்று அதற்குள் போட்டியும் நடந்துவிட்டதா. உங்கள் பேட்டிங்கை நான் மிகவும் ரசித்தேன்.’ என்று கூறியுள்ளார்.

இந்தப் பதிவை லட்சக்கணக்கானோர் பார்த்து, தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.  ‘இந்தியாவில் திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன. இதுபோன்ற திறமைகளை அடையாளம் கண்டு, உரிய பயிற்சி அங்கீகாரம் வழங்க வேண்டும். அடுத்தடுத்த வாய்ப்புகள் மூலம் நிச்சயம் சாதிப்பார்கள். இவர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம்.’ என்று கமென்ட் செய்து வருகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.