நடிகர் அஜித் நடிக்கும் 62-வது படத்தின் ஒடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
அஜித், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகி உள்ளது துணிவு படம். போனி கபூரின் குறைவான பட்ஜட்டில் எந்த அளவிற்குப் படத்தை முழுமையாக மாற்ற முடியுமோ அந்த அளவிற்கு இயக்கி உள்ளார் வினோத்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் திரைக்கு வந்துள்ளது.
இதனால் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு படங்களை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அஜித் நடிக்கும் 62வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த புதிய படத்தின் ஓடிடி உரிமையை நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது.
இன்னும் துணிவு படத்தின் கொண்டாட்டமே ஓயாத நிலையில், அஜித் 62வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளதால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.







