சிறுதானியத்திலிருந்து கேக், பிஸ்கட், குலோப்ஜமூன் போன்ற உணவு வகைகளை ஒடிசா பழங்குடியின மக்கள் செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இந்த மாதத்திற்கான மனதின் குரல் இன்று காலை 11.00 மணிக்கு தொடங்கியது. இது 97வது மனதின் குரல் நிகழ்ச்சியாகும். இது இந்த ஆண்டில் முதல் மனதின் குரல் நிகழ்ச்சியாகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், இந்தியாவால் முன்மொழியப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், சர்வதேச யோகா தினம் மற்றும் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு ஆகியவற்றை கடைப்பிடிக்கும் முடிவை, ஐ.நா. சபை எடுத்து உள்ளது. யோகா, சுகாதாரத்துடன் தொடர்புடையது. சுகாதாரத்தில் சிறுதானியங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த இரண்டை பற்றிய செயல் திட்டங்களிலும், பொதுமக்கள் பங்கு வகித்து வருகின்றனர்.
இதனால், ஒரு புரட்சி வர இருக்கிறது. மக்கள் பெருமளவில் தங்களது வாழ்வின் ஒரு பகுதியாக யோகா மேற்கொள்வது மற்றும் கட்டுடலுடன் இருப்பது ஆகியவற்றில் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். இதேபோன்று, சிறுதானியங்களையும் தங்களது வாழ்வில் பெரிய அளவில் அவர்கள் ஏற்று கொண்டுள்ளனர் என கூறியுள்ளார்.
சிறுதானிய தொழில்முனைவோர்களை பற்றி நீங்கள் கேட்டு அறிந்ததுண்டா? ஒடிசாவில், சிறுதானிய இயக்கத்தின் ஒரு பகுதியாக சுந்தர்கார் என்ற பழங்குடி மாவட்டத்தின் மகளிர் சுய உதவி குழு ஒன்று தற்போது தலைப்பு செய்தியாக வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் பிஸ்கட்டுகள், கேக்குகள் மற்றும் பிற உண்பதற்கான பொருட்களை சிறுதானியங்களில் இருந்து உருவாக்கி வருகின்றனர்.
இந்த பணியில் ஈடுபட்டு உள்ள 1,500 பெண்கள், சிறுதானியங்களில் இருந்து குக்கீகள், ரசகுல்லா, குலாப் ஜாமூன் என ஒவ்வொன்றையும் உருவாக்கி வருகின்றனர். சந்தையில் அவற்றின் தேவை அதிகரிப்பால், அந்த பெண்களின் வருவாயும் அதிகரித்து உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
திணை ஆண்டையொட்டி, திணை உணவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துகாட்டும் வகையில், கடந்த நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அனைவருக்கும் திணை வகைகளினாலான உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.