ஜெ.பி.நட்டாவை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்!

மதுரையில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா உடன் நடைபெற்ற சந்திப்பில் அரசியல் பேசப்படவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா…

மதுரையில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா உடன் நடைபெற்ற சந்திப்பில் அரசியல் பேசப்படவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா மதுரை வந்துள்ளார். இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நட்டா தங்கியிருந்த விடுதிக்கு சென்று அவரை சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக ஜே.பி.நட்டாவை சந்தித்ததாக கூறினார்.

மேலும், இந்த சந்திப்பின்போது அரசியல் குறித்து பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply