திமுக – ஒன்றிய பொறுப்புகளுக்கு நான்காம் கட்ட தேர்தல் அறிவிப்பு

திமுகவின் 15 ஆவது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒன்றிய பொறுப்புகளுக்கு நான்காம் கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. திமுகவின் 15 ஆவது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று…

திமுகவின் 15 ஆவது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒன்றிய பொறுப்புகளுக்கு நான்காம் கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திமுகவின் 15 ஆவது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஒன்றிய கழக தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் ஜூன் 6, இரண்டாம் கட்ட தேர்தல் ஜூன் 15, மூன்றாம் கட்ட தேர்தல் ஜூன் 24 ஆம் தேதி வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நான்காம் கட்டமாகத் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘’வட இந்தியர்களுக்குத் தற்காலிக (அ) நிரந்தர குடியிருப்பு வழங்க உதவ வேண்டும்’ – மத்திய அமைச்சரிடம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் மனு’

நான்காம் கட்ட தேர்தலுக்கு மாவட்ட திமுக அலுவலகங்களில் ஜூன் 28-ஆம் தேதிக்குள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம் எனவும், போட்டியிருந்தால் ஜூன்-29, 30, ஜூலை-1 ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார். இதனால், ஒன்றிய கழக தேர்தலுக்காக காத்திருந்தவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.