உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணி; மத்திய அமைச்சர் பங்கேற்பு

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி நடைபெறும் சைக்கிள் பேரணியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்றுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை…

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி நடைபெறும் சைக்கிள் பேரணியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்றுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தைக் கொடி அசைத்துத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவரும் அந்த சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டார். இதில், தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் மற்றும் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 50 பேரும், கிண்டி சேர்ந்த பொறியியல் கல்வி மாணவர்கள் 50 பேரும் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்தி: ‘திமுக – ஒன்றிய பொறுப்புகளுக்கு நான்காம் கட்ட தேர்தல் அறிவிப்பு’

https://twitter.com/mansukhmandviya/status/1540881578066186241

மேலும் சைக்கிள் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் அனைவரும் விழிப்புணர்வு வாசகங்களை முதுகில் ஏந்தி, சைக்கிள் பயணத்தில் ஈடுபட்டனர். இந்த சைக்கிள் பயணம் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் தொடங்கி, கடற்கரைச் சாலை வழியாக சாமி சிவானந்தா சாலை வழியாக அண்ணா சாலை சென்று, மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு விருந்தினர் மாளிகையை வந்தடைந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.