முக்கியச் செய்திகள் தமிழகம்

பெண் என்பதால் சர்வதேச போட்டியில் பங்கேற்க தடை விதிப்பதா? – நீதிபதிகள் சரமாரி கேள்வி

தகுதி போட்டியில் தேர்வு பெற்றும், பெண் என்பதால் மாற்றுத் திறனாளி வீராங்கனை புறக்கணிக்கப்பட்டாரா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் கடையாலுமூடு பகுதியை சேர்ந்த 11 வகுப்பு மாற்று திறனாளி மாணவி சமீஹா, இவர் காது கேளாதோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து தங்க பதக்கங்களை வென்றுள்ளார். ஆகஸ்ட்23 முதல் 28 ம் தேதி போலந்து நாட்டில் நடைபெறும் தடகள போட்டியில், பங்கேற்பதற்காக டெல்லியில் நடைபெற்ற தகுதிப்போட்டியில் 12 பேரில் ஒருவராக இவர் தேர்ச்சி பெற்றார். ஆனால் மற்றொரு வீராங்கனை தகுதி பெறாததால், தனி ஒருவராக இவரை மட்டும் போலாந்து போட்டிக்கு அழைத்து செல்வது சிரமம் என இந்திய விளையாட்டுக் கழகம் முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு விளையாட்டுக் கவுன்சில் மாணவியின் குடும்பத்திடம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி மற்றும் குடும்பத்தினர், விளையாட்டுக் கழகத்தின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

சமீஹா பர்வீன் தொடர்ந்த வழக்கு, நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், கடந்த ஏழு ஆண்டுகளாக கடும் சிரமங்களுடன் கடும் பயிற்சிகளை மேற்கொண்டதாகவும், விளையாட்டு கழகத்தின் முடிவினால் அதிருப்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நீதிபதி, தகுதிப்போட்டியில் தேர்வு பெற்றும் பெண் என்பதால் சர்வதேச போட்டியில் பங்கேற்க அனுமதி மறுப்பதா?- என கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக நாளைக்குள் பதில் அளிக்காவிட்டால் நேரடியாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் புதிதாக 1,733 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Saravana Kumar

வேளச்சேரி தொகுதியில் வாக்குச்சாவடி எண்-92 ல் மறு வாக்குப்பதிவு!

Saravana Kumar

அவசியமில்லாமல் ஸ்டீராய்டுகளை பயன்படுத்த வேண்டாம்: அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

Halley karthi