திமுகவை எதிர்க்க அதிமுக வலிமையாக இருக்க வேண்டுமென வி.கே. சசிகலா தெரிவித்தார்.
ஈரோட்டில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட சசிகலா தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பெண் சிசு கொலையை தடுக்க ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் தான் தொட்டில் குழந்தை திட்டம். இதுபோன்ற மக்கள் நல திட்டங்களை கொண்டு வந்தவர் தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால் தற்போது இந்த திட்டங்களுக்கு மூடுவிழா நடத்த திமுக முடிவு செய்துள்ளது. 15 மாத ஆட்சி் காலத்தில் திமுக எதையும் செய்யவில்லை.
ஆவின் பால் விலை , சொத்து வரி உயர்வு , மின் கட்டண உயர்வு என பலவற்றை திமுக உயர்த்தி உள்ளது. மின் கட்டண உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள்.பீக் ஹவர்ஸ் இதுவரை சிறு, குறுதொழில்களுக்கு இல்லை. பீக்ஹவர்ஸ் என்பது 4 மணிநேரத்திலிருந்து 8 மணி நேரமாக மாற்றியுள்ளனர்.
திமுக அரசு மக்கள் விரேத அரசு, விரைவில் பேருந்து கட்டணத்தையும் உயர்த்த உள்ளனர். மக்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடலா, அதனால் திமுகவை எதிர்க்க அதிமுக வலிமையாக இருக்க வேண்டும். எனவே மீண்டும் அதிமுகவை வலிமையாக கொண்டுவருவது தான் எனது ஓரே குறிக்கோள். எந்த வித சோதனைகள் இயக்கத்திற்கு ஏற்பட்டலும் கட்சியை வலுப்படுத்தி யாரலும் அசைக்க முடியாத சக்தியாக மாற்றுவோம் எனவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு முடிவு கட்டுவோம் எனவும் பேசினார்.