முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தலைமை ஆசிரியரைத் தாக்கிய திமுக கவுன்சிலரின் கணவர் – வீடியோ வைரல்

அவிநாசியில் அரசு துவக்கப் பள்ளியில் புகுந்து திமுக கவுன்சிலரின் கணவர்
தலைமை ஆசிரியரை தாக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபுதூர் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இதில், 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று
வருகின்றனர். இந்தப் பள்ளியின் பின்புறம் உள்ள பாஸ்கர் என்பவரது வீட்டிலிருந்து
தினமும் பள்ளி வளாகத்திற்குள் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார கேடு
ஏற்படுகிறது என தலைமை ஆசிரியர் குப்பைகளை இங்கு கொட்ட வேண்டாம் என பல முறை தெரிவித்து வந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், பள்ளிக்குள் உள்ள செடிக்கு பள்ளி மாணவர்கள் தண்ணீர் ஊற்றச் சென்ற போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கழிவுநீரை பள்ளி மாணவர்கள் மீது ஊற்றியுள்ளார். இது குறித்து மாணவர்கள் எதிர்த்து கேட்டபோது, ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாஸ்கர் பள்ளி மாணவர்கள் 6 பேரை அடித்து விரட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட பாஸ்கரை போலீஸார் கண்டித்துள்ளனர்.

மேலும், மாணவர்கள் தாக்கப்பட்டதை அடுத்து பெற்றோர்கள் பள்ளியில் விசாரிப்பதற்காக வந்துள்ளனர். அப்பொழுது மாணவர்களைத் தாக்கிய பாஸ்கருக்கு ஆதரவாக அவிநாசி பேரூராட்சி 17 வார்டு உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த ரமணி என்பவரின் கணவர் துரை என்பவர் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். மேலும்
போதையில் பள்ளிக் குழந்தைகளின் முன்பாகவே அனைவரையும் ஒருமையில் அநாகரீகமாகப் பேசுகிறார்.

அதற்குத் தலைமை ஆசிரியர் நீங்க தப்ப தட்டிகேட்க வேண்டியதுதானே என்று கூறவும்,
கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற கவுன்சிலர் கணவர் தலைமை ஆசிரியர் செந்தாமரை கண்ணனை கழுத்தை நெறித்து தாக்கிவிட்டு அங்கிருந்து செல்கிறார். பள்ளித் தலைமை ஆசிரியரை பள்ளி நேரத்தில், பள்ளி குழந்தைளின் கண்முன்னே தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க. கவுன்சிலரின் கணவர் பள்ளித் தலைமையாசிரியரை தாக்குவதை அருகில் இருந்தவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிவ சேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

Mohan Dass

விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்: ராகுல் காந்தி

Mohan Dass

நாளை 2 முக்கிய நிகழ்ச்சிகள்: ரஜினிகாந்த் திடீர் அறிக்கை

Halley Karthik