முக்கியச் செய்திகள் தமிழகம்

நிலத் தகராறு தொடர்பாக புகார்-ஓபிஎஸ் சகோதரர் மீது வழக்குப் பதிவு

பெரியகுளத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் மீது நிலத் தகராறு தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் பெரியகுளம் நகர மன்ற உறுப்பினர் ஓ.சண்முகசுந்தரம் மீது நிலத்தகராறில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரஹார பகுதியில் குடியிருந்து
வரும் ஓய்வுபெற்ற மருத்துவர் விமலா திருமலை என்பவர் வீட்டின் அருகில் உள்ள
வீட்டுமனை அதே பகுதியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர்
சண்முகசுந்தரம் விலைக்கு வாங்கி பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு
கட்டுவதற்காக பணியில் ஈடுபட்டபோது மருத்துவர் விமலா, திருமலை ஆகியோரிடையே
நிலம் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில், மருத்துவர் விமலா வீடு பலவீனமடைந்து வருவதை தொடர்ந்து வேலைக்கு ஆள் அனுப்பி கட்டிட வேலையில் ஈடுபட்டபோது ஓ.சண்முகசுந்தரம் பெரியகுளம் நகராட்சி
24 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் விமலா, திருமலைக்கும் சண்முகசுந்தரத்திற்கும் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் சண்முகசுந்தரம், விமலா திருமலைக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் விமலா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.சண்முகசுந்தரத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஓ.சண்முகசுந்தரம் ஓய்வு பெற்ற மருத்துவர் விமலா திருமலை மீது புகார் அளித்து
இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியகுளம் பகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.
சண்முகசுந்தரம் மீது காவல் நிலையத்தில் நிலம் சம்பந்தமாக வழக்குப் பதிவாகி
இருப்பது பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விட்டுக்கொடுக்க வேண்டியவர்களே தட்டிப் பறிக்க நினைப்பதாக பொதுமக்கள்
மத்தியில் வைரலாகப் பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இருசக்கர வாகனத்தினை மறித்து திருடர்களை மடக்கிப் பிடித்த ஆட்டோ ஓட்டுநர்

Arivazhagan Chinnasamy

ஆளுநரே…நீங்கள் ஜனாதிபதி அல்ல: திமுக நாளேடு

EZHILARASAN D

விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் ஜோகோவிச்!

Web Editor