கொலை வழக்கில் தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுராந்தகம் அருகே கடந்த வாரம் அடையாளம் தெரியாத நபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.உடலில் வெட்டு காயங்கள் இருந்ததால் கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் செங்கல்பட்டு அடுத்துள்ள படாளம் காவல் எல்லைக்குட்பட்ட குமாரவாடி பகுதியில், கொலை செய்யப்பட்ட நபர் கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த குமார் (44) என தெரிய வந்தது.
இந்தநிலையில், தாம்பரம் மாநகராட்சி திமுக கவுன்சிலர் கொடி தாமோதரன் மற்றும் அவரது மகன் இருவரும் கூட்டாளிகளுடன் இணைந்து கொலை செய்ததாக விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்த தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.







