Skip to content
January 12, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » important news » dmk coral festival preparations are in full swing at ymca ground
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

#திமுக பவள விழா | சென்னை #YMCAமைதானத்தில் ஏற்பாடுகள் தீவிரம்… 75000 பேர் அமரும் வகையில் வசதிகள்!

திமுக சார்பில் வருடந்தோறும் நடக்கும் முப்பெரும் விழாவோடு இந்த ஆண்டு திமுக தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதையொட்டி பவள விழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. திமுக…

Author Avatar

Web Editor

September 16, 202412:15 pm arivalayamCMO TAMIL NADUDMKflaglogoMK StalinMupperum VizhaTN Govt

திமுக சார்பில் வருடந்தோறும் நடக்கும் முப்பெரும் விழாவோடு இந்த ஆண்டு திமுக தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதையொட்டி பவள விழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததால், முப்பெரும் விழாவை பவள ஆண்டு விழாவாக வரும் செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவரமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, திமுகவின் முப்பெரும் விழாவில் கட்சியில் சிறப்பாக பணியாற்றுபவர்களை அடையாளம் காட்டும் விதமாக, 1985ஆம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கட்சியினர் மத்தியில் விருது பெறுபவர்கள் மிக கௌரவமாக பார்க்கப்படுகின்றனர். அதன்படி, இந்த ஆண்டிற்கான விருது பெறுபவர்களும் அறிவிக்கப்பட்டனர்.

அதில் , பெரியார் விருது – பாப்பம்மாள், அண்ணா விருது – அறந்தாங்கி நிஷா ராமநாதன், கலைஞர் விருது – எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி, பாவேந்தர் விருது – கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது – வி.பி.ராஜன் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் புதியதாக விருது பட்டியலில் சேர்க்கப்பட்ட ‘மு.க.ஸ்டாலின் விருதை’ தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வழங்கப்படுகிறது.

மேலும், இந்த ஆண்டு பவள விழா ஆண்டு என்பதால், அதனை குறிக்கும் விதத்தில் 75 ஆயிரம் பேர் அமரும் வகையில் அரங்கு அமைக்கப்படுகிறது. அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் என அனைவருக்கும் தனித்தனியே பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

விவேகானந்தர் பிறந்தநாள் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

By Web Editor January 12, 2026

“கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

By Web Editor January 12, 2026

மதியம் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

By Web Editor January 12, 2026

GOLD RATE | தங்கம் விலை அதிரடி உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

By Web Editor January 12, 2026
#ट्रेंडिंग हैशटैग:arivalayamCMO TAMIL NADUDMKflaglogoMK StalinMupperum VizhaTN Govt

Post navigation

Previous Previous post: ரஜினிகாந்த் நடிக்கும் #Vettaiyan இசை வெளியீட்டு விழா – எப்போது தெரியுமா?
Next Next post: #Odisha | மாட்டிறைச்சி சமைத்ததாக 7 மாணவர்கள் கல்லூரி விடுதியை விட்டு வெளியேற்றம்!
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading