முக்கியச் செய்திகள் செய்திகள்

திமுக- காங்., தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்தது!

திமுக-காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதி உடன் பாடு இன்று காலை 10 மணிக்கு கையெழுத்தாவதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இடம் பெற்றுள்ள, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள்,மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டியுள்ள நிலையில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு காங்கிரஸ் மேலிடபொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். அப்போது இரண்டு தரப்பிலும் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டப்பேரவை தொகுதிகள், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி, ஒரு மாநிங்களவை சீட் கொடுக்க திமுக தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று இரவே தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த காங்கிரஸ் மேலிடப்பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு திமுக உடன் தொகுதி பங்கீடு கையெழுத்திடப்பட உள்ளது என்று கூறினார்.

Advertisement:

Related posts

ஒப்பந்த புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு

Karthick

வைரலாகும் ‘குக் வித் கோமாளி’ புகழின் புதிய கார்

Jeba

பஞ்சாப் கிங்ஸ் VS ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு; வெல்லப்போவது யார்!

Ezhilarasan