திமுக ஆட்சியில் அதிகளவு மின்வெட்டு: பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு மாதத்திற்குள் அதிகமாக மின்வெட்டு நிலவுவதாக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். கரூரில் பாஜக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணப்பொருள்கள் வழங்கும் நிகழச்சி நடைபெற்றது. இதில் பாஜக…

திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு மாதத்திற்குள் அதிகமாக மின்வெட்டு நிலவுவதாக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

கரூரில் பாஜக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணப்பொருள்கள் வழங்கும் நிகழச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு அரிசி பருப்பு காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சிவசாமி ,மாவட்ட நிர்வாகி செந்தில்நாதன் உள்ளிட்ட ஏராளமான நிவாகிகள் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய, அண்ணாமலை கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத மின் தடை திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிகரித்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.