அமெரிக்காவை விட அதிக தடுப்பூசிகள்: ஹர்ஷவர்தன் தகவல்

அமெரிக்காவை விட அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை இந்தியா இதுவரை செலுத்தியுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார். கொரோனா தடுப்பு குறித்த அமைச்சர்கள் குழுவின் 29வது உயர் நிலைக் கூட்டம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில்…

அமெரிக்காவை விட அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை இந்தியா இதுவரை செலுத்தியுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு குறித்த அமைச்சர்கள் குழுவின் 29வது உயர் நிலைக் கூட்டம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று  நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி,  நித்தியானந்த் ராய், அஸ்வினி குமார் சௌபே ஆகியோர்  இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே. பால் காணொலிக் காட்சி வாயிலாக இதில் பங்கேற்றார்.

ஆலோசனையில் கொரோனா தடுப்பூசித் திட்டம் பற்றிப் பேசிய ஹர்ஷ்வர்தன், “தடுப்பூசி  திட்டத்தில் மேலும் ஒரு மைல்கல் சாதனையாக அமெரிக்காவை விட அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை இந்தியா இதுவரை செலுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி தடுப்பூசித் திட்டம் தொடங்கியது. ஆனால் இந்தியாவிலோ, இந்த ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி தான் இந்தத் திட்டம் துவங்கியது” என்று பெருமிதம் தெரிவித்தார். 

கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள மியூகோமைக்கோசிஸ் நோய்த் தொற்றின் நிலவரம் குறித்தும் அமைச்சர்கள் குழுவின் உறுப்பினர்களிடம் அவர் எடுத்துரைத்தார். மொத்த பாதிப்பான 40,845 பேரில் 31,344 பேருக்கு மூளையைக் தாக்கும் தன்மை வாய்ந்த மியூகோர்மைகாசிஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.