முக்கியச் செய்திகள் தமிழகம்

மீண்டும் இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமனம் – திமுக அறிவிப்பு

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. 

திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளர், துணைச் செயலாளர்கள், மாநில மகளிர் அணி செயலாளர், மகளிர் தொண்டர் அணி செயலாளர், இணை, துணைச் செயலாளர்கள், உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்ப் பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞர் அணி துணைச் செயலாளர்களாக எஸ். ஜோயல், ந.ரகுபதி(எ) இன்பா ஏ.என்.ரகு, நா.இளையராஜா, ப. அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி.ராஜா (எ) பிரதீப்ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுக இளைஞரணி துணைச்செயலாளர்களாக தாயகம் கவி, ஆர்.டி. சேகர், அசன் முகமது ஜின்னா, பைந்தமிழ் பாரி, ஜோயல், துரை ஆகியோர் இருந்த நிலையில், வயது காரணமாக தாயகம் கவி, ஆர்.டி. சேகர், அசன் முகமது ஜின்னா ஆகியோர் விடுவிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மகளிர் அணித் தலைவராக விஜயா தாயன்பன், மகளிர் அணிச் செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டுள்ளார். 51 வயதான ஹெலன் டேவிட்சன் ஆசிரியையாக இருந்து அரசியலுக்கு வந்தவர். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியிலிருந்து 2009இல் தேர்வு செய்யப்பட்ட அவர், திமுகவின் மகளிர் தொண்டரணிச் செயலாளராக பதவி வகித்து வந்தார்.

மகளிர் அணி இணைச் செயலாளராக குமரி விஜயகுமார், மகளிர் அணி துணைச் செயலாளர்களாக பவானி ராஜேந்திரன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மகளிர் தொண்டர் அணிச் செயலாளராக நாமக்கல் ப. ராணியும், மகளிர் தொண்டர் அணி இணைச் செயலாளராக தமிழரசி ரவிக்குமாரும், மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர்களாக சத்யா பழனிகுமார், ஜெ.ரேகா பிரியதர்ஷினி, விஜிலா சத்யானந்த், மாலதி நாகராஜ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளர்களாக சேலம் சுஜாதா, கே.ராணி ரவிச்சந்திரன், அமலு, டாக்டர் மாலதி நாராயணசாமி, மோ.தேன்மொழி, செ.உமாமகேஸ்வரி, ஜெ. ஜெசிபொன்ராணி ஆகியோரும், மகளிர் அணி – சமூக வலைதள பொறுப்பாளர்களாக டாக்டர் பி.எம்.யாழினி, ரத்னா லோகேஸ்வரன், அ.ரியா ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மகளிர் அணி ஆலோசனைக்குழுவில் டாக்டர் காஞ்சனா கமலநாதன், சங்கரி நாராயணன், காரல் மார்க்ஸ், சிம்லா முத்துச்சோழன், சித்ரமுகி சத்தியவாணிமுத்து, வாசுகி ரமணன், காயத்ரி சீனிவாசன், மலர் மரகதம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாவோ பேட்ஜ் அணிந்த சீன வீராங்கனைகள்: எச்சரிக்கை விடுத்த ஒலிம்பிக் சங்கம்

Vandhana

அதிவேகமாக வாகனத்தை இயக்கிய யூடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு

G SaravanaKumar

முல்லைப் பெரியாறு அணை 4-வது முறையாக 142 அடியை எட்டியது

Halley Karthik