”திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தது சரியே” – சரத்குமார்

தமிழ்நாடு என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சட்டமன்றத்தில் இருந்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளது சரியே என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே…

தமிழ்நாடு என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சட்டமன்றத்தில் இருந்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளது சரியே என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே உள்ள பழையனூர் சந்திப்பு சாலையில், சமத்துவ மக்கள் கட்சியின் கொடியினை அக்கட்சித் தலைவர் சரத்குமார் ஏற்றி வைத்தார். மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாடு, பெயர் மாற்றம் பெற்று 54 ஆண்டுகள் ஆகிறது. 1969ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது. தமிழ்நாடு என்கிற பெயரை தமிழகம் என ஆளுநர் குறிப்பிடுவது, தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் தேவையற்ற விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சட்டமன்றத்தில் இருந்து திமுக கூட்டணி
கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளது சரியே. ஆளுநர் உரையை, முன்கூட்டியே தயார் செய்து தமிழக அரசின் சார்பாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அப்படி இருந்தும் ஆளுநர் சட்டமன்றத்தில் உரையை முறையாக படிக்காமல் தவிர்த்தது தவறு” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.