பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஆதரவாளர்கள் போலீஸ் தடுப்புகளை மீறி நாடாளுமன்றம், ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்திற்குள் நுழைந்தனர். இதனால் அங்கு உச்சக்கட்ட குழப்பம் உருவாகியுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் பிரேசில் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் போல்சனாரோ தோல்வியடைந்தார், முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இத்தேர்தலில் வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனாரோ தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
இதற்கிடையே பிரேசில் நாடாளுமன்றத்தில் போல்சனாரோவில் ஆதரவாலர்கள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டு சூரையாடினர். ஜனாதிபதி மாளிகை, உச்சநீதிமன்றம் வளாகம் முன் திரண்ட போல்சனாரோ ஆதரவாளர்கள் தற்போதைய அதிபருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். கலவரத்தில் 200-க்கும் மேற்பட்ட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்த வன்முறையை கண்டித்த முன்னாள் அதிபர் போல்சனாரோ, “ வன்முறையை தூண்டிவிட்டதாக ஆதாரமில்லாமல் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்ற குற்றம் சாட்டுகின்றனர்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், பிரேசில் நாடாளுமன்ற தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர், ஐ.நா பொதுச் செயலாளர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது அறிக்கையில், பிரேசிலில் அரசு நிறுவனங்களுக்கு எதிரான கலவரம் கவலை அளிக்கிறது. ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும். பிரேசில் அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஆதரவையும் வழங்குகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.







