முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தொகுதி பங்கீடு இழுபறி இல்லை, விரைவில் உடன்பாடு ஏற்படும் – தேமுதிக

அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில், இழுபறி இல்லை என்றும் இன்று அல்லது நாளை தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்படும், என்றும் தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதிமுக, தேமுதிக கூட்டணியில் இழுபறி நீடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், நேற்று சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில், அதிமுக பேச்சுவார்த்தைக் குழுவினரை, தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள், சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பார்த்தசாரதி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். தங்களுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதை, அதிமுக உறுதி செய்துள்ளதாகக் கூறிய பார்த்தசாரதி, சட்டமன்றத் தொகுதிகள் எத்தனை என்பது, இன்னும் முடிவாகவில்லை எனக் குறிப்பிட்டார்.

41 தொகுதிகளிலிருந்து 23 தொகுதிகளாக, தாங்கள் இறங்கி வந்திருப்பதாகக் கூறிய பார்த்தசாரதி, விரைவில் தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்தாகும், என நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையே தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார். அதிமுக, தமாகா இடையே தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அதிமுக இதுவரை பாமக, பாஜக ஆகிய இரண்டு கூட்டணிக் கட்சிகளுடன், தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளது. பாமகவிற்கு 23 இடங்களும், பாஜகவிற்கு 20 இடங்களும் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளன.

Advertisement:

Related posts

அசாமில் வாக்குப்பதிவு நிறைவு!

Ezhilarasan

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

Jayapriya

இன்று 16ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்; நாகை மீனவர்கள் திதி கொடுத்து அஞ்சலி!

Jayapriya