“5 மாநிலங்களிலும் பாஜக தோல்வியை தழுவும்” – டி.ராஜா

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தோல்வியை தழுவும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட…

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தோல்வியை தழுவும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் பாஜகவுக்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பொதுத்துறை நிறுவனங்களை மத்திய பாஜக அரசு தனியார் வசம் ஒப்படைத்து வருகிறது. பாஜகவின் மதவாத கொள்கை தமிழகத்தில் எடுபடாது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகம், கேரளா அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களிலும் பாஜகவிற்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.