நவம்பர் 13-ல் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!

தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்  வரும் நவம்பர் 13ஆம் நடைபெறுகிறது.

தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்  வரும் நவம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

”தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் 13.11.2025 வியாழக்கிழமை காலை 10.00 மணியலவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறவுள்ளது. கழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் கலந்தாலோசிக்கப்பட்ட உள்ளது. அனைத்து மாவட்ட கழக செயலாளர்களும் தவறாமல் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.