ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷ்ரேயஸ் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹராரேயில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நேறு நடைபெற்ர 2வது டி20 போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்று பெற்றதன் மூலம் தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில் இந்தியா- ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி அதே ஹராரேயில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிரங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் வைபவ் சூரிய வன்ஷி அட்டத்தை அதிரடியாக் துவங்கினார். மறுமுனையில் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனையடுத்து வந்த இஷன் கிஷன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்து 26 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து அதிரடியாக் ஆடிய இலம் வீரர் வைபவ் சூரியவன்ஷி 4 சிக்ஸர்கள் மற்றும் 8 ஃபோர்களுடன் 49 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்தது.
இந்த நிலையில் ஜிம்பாப்வே அணி 193 என்ற கடின இலக்கை துரத்தி விளையாடி வருகிறது.




