“ஊழியர்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்!” – எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கி மேலாளரை மு.க.அழகிரியின் மகள் கயல்விழி தாக்கியதாக கூறப்படும் நிலையில் ஊழியர்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என எஸ்பிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை அடையாறில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளான கயல்விழிக்கு சொந்தமான் இடத்தில் எஸ்.பி.ஐ வங்கி கிளை வாடகைக்கு இயங்கி வருகிறது. இந்த வங்கியில் மிந்தூக்க்கி பழுதடைந்ததால் வங்கி மேலாளர் கட்டிடத்திற்குச் சொந்தமானவரான கயல்விழியிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கயல்விழி வங்கிமேலாளரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஆன நிலையில் கயல்விழி வங்கி மேலாளரை அரைந்துள்ளார். இதுகுறித்து வங்கி மேலாளர் அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் ன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து எஸ்.பி.ஐ வங்கி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சென்னையில் உள்ள எங்கள் வங்கி கிளை ஒன்றில் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்தது. எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நலன் ஆகியவை எங்களுக்கு முதன்மையானவை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வங்கி மேற்கொள்ளும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Kayalvizhi | #FIR | #MKAlagiri | #SBI | #TamilNews | #LatestNews

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.