7வது முறையாக விம்பிள்டன் சாம்பியன்- ஜோகோவிச் அசத்தல்!

7 வது முறையாக விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் செர்பியா வீரர் ஜோகோவிச். ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய வீரரான நிக் கிர்கியோஸ் உடன் இன்று மோதிய ஜோகோவிச் 4-6, 6-3,…

7 வது முறையாக விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் செர்பியா வீரர் ஜோகோவிச்.

ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய வீரரான நிக் கிர்கியோஸ் உடன் இன்று மோதிய ஜோகோவிச் 4-6, 6-3, 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் கைப்பற்றி மகுடம் சூடினார்.

இதன் மூலம் 21 ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்றுள்ளார் ஜோகோவிச்.
பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், முதல் செட்டை கிர்கியோஸ் 4-6 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இதையடுத்து, அடுத்தை செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தார் ஜோகோவிச். இரு வீரர்களுக்கு இடையிலான ஆட்டம் சூடிபிடிக்கத் தொடங்கியது. பார்வையாளர்கள் நகத்தை கடித்துக் கொண்டு ஆர்வத்துடன் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மூன்றாவது செட் ஆட்டம் தொடங்கியது. அந்த செட்டையும் ஜோகோவிச் எளிதில் கைப்பற்றி அசத்தினார். வெற்றியைத் தீர்மானிக்கும் நான்காவது செட் ஆட்டத்தில் யார் ஜெயிப்பார்கள் என்ற பரபரப்பு ஏகிறியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் நான்காவது செட் ஆட்டம் டை பிரேக்கர் வரை சென்றது.

இதையடுத்து நடைபெற்ற கேமில் 7-6 (7-3) என்ற கணக்கில் போராடி கைப்பற்றி மகுடம் சூடினார் ஜோகோவிச்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.