இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட்-இந்தியாவுக்கு 216 ரன்கள் இலக்கு

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3ஆவது டி20 ஆட்டம் நாட்டிங்காமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள்…

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3ஆவது டி20 ஆட்டம் நாட்டிங்காமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக மலன் 77 ரன்கள் எடுத்தார். லிவிங்ஸ்டன் 42 ரன்களும், கேப்டன் ஜோஸ் பட்லர் 18 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியைப் பொருத்த வரை ரவி பிஷ்ணோய், ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஆவேஷ் கான், உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிவரும் இந்தியா தொடக்கம் முதலே தடுமாறியது.

கேப்டன் ரோஹித் சர்மா 11 ரன்களில் நடையைக் கட்ட, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் கோலி சொல்லி வைத்தார் போல 11 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து, களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடி காண்பித்து வருகிறார்.

சூர்யகுமார் யாதவ்.

அவர் அரை சதம் பதிவு செய்ததுடன், அவருடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயஸ் ஐயரும் நிதானமாக விளையாடி வருகிறார். 14.3 ஓவர்களில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

முதல் 2 டி20 ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிவிட்டது. எனவே, மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஆட்டம் சம்பிரதாய ஆட்டமாகும். இதன் வெற்றி-தோல்வி இந்திய அணியை பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) தொடங்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.