முக்கியச் செய்திகள் தமிழகம்

தீபாவளி மதுவிற்பனை: 2 நாட்களில் ரூ.464 கோடி வசூல்- முதல் இடத்தில் மதுரை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்களில் ரூ.464 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. தமிழகத்தில் மது விற்பனையில் மதுரை முதலிடத்தில் உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமாகன விடுமுறை நாட்களில் சுமார் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். ஆனால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் விற்பனையாகும் மதுபானங்களின் சாதனை ஒவ்வொரு ஆண்டு முறியடிக்கப்படுவது வழக்கம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்தாண்டு தீபாவளியின் போது 2 நாட்களில் ரூ.431 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. இதனை மிஞ்சும் அளவிற்கு தீபாவளி விற்பனையாக கடந்த 2 நாட்களில் ரூ.464.21 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. அதன்படி, நேற்று சென்னை-ரூ. 51.52 கோடி, திருச்சி-ரூ.50.66 கோடி, சேலம் ரூ.52.36 கோடி, மதுரை ரூ.55.78 கோடி, கோவை- ரூ.48.47 கோடி என மொத்தமாக ரூ. 258.79 கோடிக்கு மது விற்பனையானது.

நேற்று முன்தினம், சென்னை-ரூ.38.64 கோடி, திருச்சி-ரூ.41.36 கோடி, சேலம்-ரூ.40.82 கோடி, மதுரை ரூ.45.26 கோடி, கோவை ரூ.39.34 கோடி என மொத்தமாக ரூ. 205.42 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கடந்தாண்டின் சாதனையை இந்த தீபாவளி முறியடித்துள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.101.04 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னைக்கு அருகில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் – மா.சுப்பிரமணியன்

G SaravanaKumar

தென்னக ரயில்வே செயலை கண்டித்து திருவாரூர், நாகையில் ரயில் மறியல் நடத்தப்படும் -செல்வராசு எம்.பி

EZHILARASAN D

100 இடங்களில் கொரோனா சித்தா மையங்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Jeba Arul Robinson