தீபாவளி பண்டிகை: சொந்த ஊர்களுக்கு படையெடுத்த சென்னைவாசிகள்!

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னைவாசிகள் அதிகாலை முதலே சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.  இந்த நிலையில்,…

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னைவாசிகள் அதிகாலை முதலே சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

நாடு முழுவதும் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.  இந்த நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தமிழக மக்கள் தனது சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி கொண்டாட போக்குவரத்து கழகம் சார்பாக 16,895 சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:தீபாவளியை கொண்டாடும் விதமாக கனடா அரசு சிறப்பு தபால் தலை வெளியீடு!

நேற்று 1,365 சிறப்பு பேருந்துகள் மூலம் 1,30,000 சென்னையில் இருந்து  தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.  இதற்காக சென்னையில் மட்டும் 5 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளை விட இன்று இரண்டாவது நாளாக சென்னையில் 1,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.  இன்றும் ஒரு லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களுக்கு மட்டும் நான்கு லட்சம் பேர் பயணம் செய்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  கோயம்பேடு மட்டுமின்றி கே.கே.நகர், திருவல்லிக்கேணி,  தாம்பரம் போன்ற பேருந்து நிலையத்தில் கூட அதிகாலையில் இருந்தே கூட்ட நெரிசலாக காணப்படுகிறது.

பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டடு வருகின்றனர்.  மேலும் பயணிகள் எடுத்துச் செல்லும் உடைமைகளையும் சோதனை செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.