ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

அப்பொது ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவைக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அப்போது பேசியவர், ரயில்​வே​யில் பணி​யாற்​றும் 11.40 லட்சம் ஊழியர்​களுக்கு 78 நாட்​களுக்கு நிக​ரான ஊதி​யத்தை போனஸாக வழங்க மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் அளித்துள்ளது. இதன்​படி, ரயில்வே ஊழியர்களுக்கு 2009.61 கோடி போனஸாக வழங்​கப்​படும். ரயில்வே ஊழியர் ஒரு​வருக்கு அதி​கபட்​ச​மாக ரூ.17,951 போனஸாக கிடைக்​கும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.