மாவட்டங்கள் தோறும் ITHub – திமுகவின் அதிரடி முடிவு

மக்களுக்கு உதவிடும் வகையில் மாவட்டம் தோறும் திமுக சார்பில், மாவட்ட செயலாளர்கள் ஐடி ஹப்  தொடங்கி செயல்படுத்த வேண்டும் என திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி ஆர் டி ராஜா அறிவித்துள்ளார்.…

மக்களுக்கு உதவிடும் வகையில் மாவட்டம் தோறும் திமுக சார்பில், மாவட்ட செயலாளர்கள் ஐடி ஹப்  தொடங்கி செயல்படுத்த வேண்டும் என திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி ஆர் டி ராஜா அறிவித்துள்ளார்.

 

திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  அறிவுறுத்தலின்படி தகவல் தொழில்நுட்ப அணியின் ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

அதன்படி, ஒவ்வொரு மாவட் டத்திலும்  (IT Hub) ஐடி ஹெப் ஒன்று அமைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மாவட்டச்செயலாளர்களின் ஒப்புதலுடன் அவர்களது அலுவலகங்க ளிலோ அல்லது எம்.எல்.ஏ.க்கள் அலுவலகத்திலோ, தனி அலுவலகத்திலோ இந்த அமைப்பானது செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மக்களுக்குத் தேவையான இணைய சேவைகளை, இ-சேவை நிலையங்கள் போல இந்தக் கட்டமைப்பை பயன்படுத்தி தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் செய்துகொடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச்செயலாளர்கள் அனைவரும், தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 மடிக்கணினிகள் (Laptop) மற்றும் தேவையான அலுவலக வசதிகளை (மேசைகள், நாற்காலிகள், இணைய வசதி) செய்து கொடுத்து முதலமைச்சரின் கட்டளையை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன் என டிஆர்பி ராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.