அடிப்படை வசதிகள் வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் படுகர் இன மக்கள் மனு!

பிங்சிச்சகல் படுகர் இன கிராம மக்கள் சாலை மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். நீலகிரி மாவட்டம், நஞ்சநாடு அருகே உள்ள பிங்சிச்சகல் படுகர்…

பிங்சிச்சகல் படுகர் இன கிராம மக்கள் சாலை மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

நீலகிரி மாவட்டம், நஞ்சநாடு அருகே உள்ள பிங்சிச்சகல் படுகர் கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிராமத்தில் பல வருடங்களாக சாலை , குடிநீர், நடைபாதை, என எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இக்கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் அவசர தேவைகளுக்கு தங்கள் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரமுடியாமலும், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் இரண்டு கிலோமீட்டர் துாரத்திற்கு வனப்பகுதியை ஒட்டி உள்ள சாலையை பயன்படுத்தி வருவதாகவும் இதனால் அந்த கிராம பகுதியில் அடிக்கடி வனவிலங்கு தாக்குதல்கள் ஏற்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் வனப்பகுதியில் அமைந்துள்ள ஊற்று நீரையே குடிநீராக பயன்படுத்தி வருவதாகவும் கூறுகின்றனர். கிராம மக்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் குடிநீர் முறையாக வழங்க கோரியும், குடியிருப்புகளின் அருகே அபாயகரமான மண்சரிவு பகுதிகளில் கான்கிரீட் தடுப்பு சுவர் மற்றம் அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

—அனகா காளமேகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.