குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சொல்லி கெஞ்சிய சப் இன்ஸ்பெக்டர் : பாராட்டிய தமிழ்நாடு முதலமைச்சர்

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சொல்லி கெஞ்சிய சப் இன்ஸ்பெக்டரை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். கல்வியின் அருமையை உணர்ந்த காவல் உதவி ஆய்வாளர் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி…

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சொல்லி கெஞ்சிய சப் இன்ஸ்பெக்டரை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

கல்வியின் அருமையை உணர்ந்த காவல் உதவி ஆய்வாளர் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அம்மக்களிடம் சப் இன்ஸ்பெகட்ர் பேசும் காணொளி இணையத்தில் வைரலாகி உள்ளது.

அவர் அந்த வீடியோவில் “ நான் தவறு செய்தால் கூட விட்டு விடுவேன். ஆனால்  படிக்காமல் இருந்தால் விடமாட்டேன். பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன் என பேசியுள்ளார்.  அப்பகுதியில் படிப்பின் அவசியத்தை எடுத்துக் கூறி  நூதனப் பிரச்சாரத்தை மேற்கொண்ட  போலீசார் பெண்ணா லூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பரமசிவனாகும்.

இணையத்தில் வைரலான வீடியோ குறித்த செய்திகள் பரவலாக செய்தித் தாள்களில் பிரசுரமாகியுள்ளன. இந்த செய்தியை படித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து அந்த காவல் உதவி ஆய்வாளரை பாராட்டியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..

காலைச் செய்தித்தாளில் மகிழ்ச்சிதரும் செய்தியைப் படித்தேன்! பகிர்கிறேன். குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல; நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு. குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி S.I பரமசிவம் அவர்களை வாழ்த்துகிறேன்.

https://twitter.com/mkstalin/status/1648188808519880705

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.