பள்ளி செல்லா மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிய உத்தரவு

பள்ளி செல்லா மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிந்து, பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 6…

பள்ளி செல்லா மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிந்து, பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 6 முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லா / இடைநின்ற மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிந்து பள்ளியில் சேர்க்க வேண்டும். வீடு, வீடாகச் சென்று கணக்கெடுத்து மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிய வேண்டும்.
பள்ளிகளில் சேர்த்த பின் 3 மாத கால பயிற்சி வழங்கி, இயலாமையைப் பொருத்து பள்ளிக் கல்வி அல்லது வீட்டு வழிக் கல்வியை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும். அனைவரும் கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– ம.பவித்ரா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.