பேரிடர் காலங்களில் ஆபத்தில் சிக்கும் மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த தன்னார்வலர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியிர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பருவமழை காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளில் சிக்கும் மக்களை பாதுகாக்க அரசு பேரிடர் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு துரிதமாக செயல்பட்டு பொதுமக்களை காப்பாற்றுவார்கள். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு படையினருக்கு அவ்வப்போது பயிற்சி வகுப்புகள், ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஒத்திகையின் போது ஆபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது, முதலுதவி அளிப்பது போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அரசு பேரிடர் குழுக்கள் மட்டுமல்லாது பல தன்னார்வலர்களும் பேரிடர் காலங்களில் பொதுமக்களை ஆபத்தில் இருந்து மீட்க உதவுவார்கள். பொதுவாக மழைகாலங்களில் ஏற்படும் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தன்னார்வலர்களுக்கான பேரிடர் காலப்பயிற்சி ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் வழங்கபட்டது. இந்த பயிற்சியானது புதுக்கோட்டை மாவட்டம் மிரட்டுநிலை பகுதியில் உள்ள பிஎஸ்வி பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து கடந்த 21ம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற பயிற்சி முகாமினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பிஎஸ்வி பாலிடெக்னிக் கல்லூரியின் சேர்மன் சா.குமார் உடனிருந்தார்.