வந்தியத்தேவனின் அடுத்த அவதாரம்: இன்று மாலை வெளியாகிறது சர்தார் டீஸர்

நடிகர் கார்த்தி தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகியுள்ள விருமன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இவர் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின்…

நடிகர் கார்த்தி தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகியுள்ள விருமன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இவர் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சர்தார் திரைப்படத்தில் நடித்துள்ளார் கார்த்தி. இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி.எஸ். மித்ரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்தி வயதான தோற்றத்தில் நடித்துள்ளார். முன்னதாக இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு தரப்பில் தெரிவித்ததோடு படத்தின் முதல் சிங்கில் மற்றும் டீஸர் விரைவில் வெளியாகும் எனப் படத்தின் இயக்குநர் பி.எஸ். மித்ரன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சர்தார் திரைப்படத்தின் டீஸர் இன்று மாலை 5:30 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தியின் கதாபாத்திரத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் தற்போது சர்தார் திரைப்படமும் ரசிகரக்ல் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.