திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்: நாராயணசாமி

புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும், என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார். புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் பேட்டியளித்த அவர், ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவை ரத்து செய்யக்…

புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும், என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் பேட்டியளித்த அவர், ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவை ரத்து செய்யக் கூடாது, என்று கேட்டுக் கொண்டார். ஜிப்மர் மருத்துவமனைக்கு தேவையான ஆக்ஸிஜன், ரெம்டெசிவர் மருந்துகளை வழங்க வேண்டும், என்றும் நாராயணசாமி வலியுறுத்தினார்.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடுவதற்கு, போதுமான தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும், என மத்திய அரசுக்கு தான் எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டிய அவர், அதற்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை, என்றும் குறிப்பிட்டார். கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும், எனவும் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.