மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்!

மானாமதுரையில், நடைபெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமில், மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பிறந்த குழந்தை முதல் 18 வயது உடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமை…

மானாமதுரையில், நடைபெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமில், மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பிறந்த குழந்தை முதல் 18 வயது உடைய
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமை மானாமதுரை ஓ.வெ.செ. பள்ளியில் நடைபெற்றது.  இந்த முகாமை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.  இதே போல் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற்றது.

இதில் மருத்துவச் சான்றிதழ் வழங்குதல்,  தேசிய அட்டைக்கான பதிவு மற்றும் புதுப்பித்தல் ,தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாளங்களுக்கான பதிவு ஆலோசனை இலவச ரயில் மற்றும் பேருந்து பயணச் சலுகை,  உபகரணங்கள் காண பதிவு உதவித்தொகைக்கான பதிவு, குழந்தைகள் நல மருத்துவர் ஆலோசனை, காது மூக்கு தொண்டை மருத்துவர் ஆலோசனை, கல்வி உதவித்தொகை, மாதாந்திர உதவித் தொகை, வங்கி கடன் உதவிகள், முட நீக்கு அறுவை சிகிச்சை ஆலோசனை, ஆரம்பகால மறுவாழ்வு பயிற்சி உட்பட ஆலோசனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.