முக்கியச் செய்திகள் தமிழகம்

12ம் வகுப்பு தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவி சாதனை-சசிகலா பாராட்டு

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2 கைகளையும் இழந்த மாற்றுதிறனாளி மாணவி லட்சுமியின் சாதனையை விகே சசிகலா பாராட்டியுள்ளார். 

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.32 சதவீதம் பேரும், மாணவர்கள் 90.96 சதவீதம் பேரும் தேர்வாகி உள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.36 சதவிதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 94.38 சதவீதம் பேரும், மாணவர்கள் 85.83 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், லட்சுமி என்ற மாணவியின் தன்னம்பிக்கையை வி.கே.சசிகலா பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “மயிலாடுதுறையில் இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி மாணவி லட்சுமி, 12-ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். தனது பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட நிலையிலும், மாணவி லட்சுமி தன்னம்பிக்கையோடும், மன உறுதியோடும் இருந்ததால் தான் இதை சாதிக்க முடிந்தது. அதேபோன்று மாணவிக்கு உறுதுணையாக இருந்த காப்பக நிர்வாகிக்கும், அவரது ஆசிரியர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவி லட்சுமி விடா முயற்சியோடு, தொடர்ந்து படித்து, உயர் கல்வி பெற்று, வாழ்வில் உன்னத நிலையை அடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் இன்னொரு பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த மாணவி துர்கா, பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளதற்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவி துர்காவின் இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயக் கல்வி பயில ஆர்வமுள்ள மாணவி துர்காவின் எண்ணம் ஈடேற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாணவர்களின் தொடர் போராட்டத்தால் கட்டணத்தைக் குறைத்தது அரசு!

Halley Karthik

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை வெளியீடு

Gayathri Venkatesan

கோயில்களின் வரவு செலவு கணக்குகள் விரைவில் ஆன்லைனில் – அமைச்சர்

Halley Karthik