தமிழ் மொழி, கலாச்சாரத்திற்கு, நான் மிகப்பெரிய அபிமானி: பிரதமர் மோடி

தமிழ் மொழி, கலாச்சாரத்திற்கு, தான் மிகப்பெரிய அபிமானி என, மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி, 2014 ஆம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்றது முதல், மன் கி பாத்…

தமிழ் மொழி, கலாச்சாரத்திற்கு, தான் மிகப்பெரிய அபிமானி என, மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி, 2014 ஆம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்றது முதல், மன் கி பாத் (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் வானொலியில், நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இம்மாத ‘மன் கி பாத்’ உரை, இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது அவர் கூறும்போது, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நமது வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் எனவும், நம் தேசத்தில் பெரும்பாலான விளையாட்டு வீரர்கள், சிறிய நகரங்கள், கிராமங்களில் இருந்து தான் உருவாகி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், நமது விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கச் செல்லும்போது, பொதுமக்கள் உத்வேகம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் தடுப்பூசி போட்டுவிட்டால் காய்ச்சல் ஏற்படலாம், ஆனால் போடாவிட்டால் அது மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு போய் சேர்க்கும் எனவும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.